உத்தரகாண்டின் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி அவர்கள் போதை பொருள்களே இல்லாத மாநிலமாக உத்தரகண்ட்டை உருவாக்க வேண்டும் என தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். உத்தரகாண்டில் தனியார் முயற்சியுடன் 43 போதை பொருள் மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. இந்த நிலையில், உத்தரகாண்டில் மாநில அளவிலான போதை பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமையேற்று பேசிய முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி, கூட்டங்கள் மட்டுமே நடத்தி விட்டு விடாமல், அதற்கு பதிலாக இந்த பணிகளை செய்வதற்காக கவுரவிக்கப்படும் என்றார் மேலும் கலாசாரம் ஒன்றையும் அதிகாரிகள் உருவாக்க வேண்டும். இது அதிகாரிகளின் கடமை. அதனுடன் மனிதகுலத்திற்கான சேவையாகும் எனவும் கூறியிருக்கிறார் தொடர்ந்து அவர், 2025-ம் ஆண்டுக்குள் போதை பொருள் இல்லாத உத்தரகாண்ட் என்ற சாதனையை படைக்க இப்பொழுதே நாம் விதைகளை விதைக்க தொடங்க வேண்டும் என்றார்.