தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் அக்கட்சியினர் 51 பேர் இரத்ததானம் செய்தனர்.
வரும் 22ம் தேதி நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் 51வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொழிலபதிபர் ஜே கே ஆர். முருகன் தலைமையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் 51 பேர் இரத்ததானம் செய்தனர். பின்னர் இது குறித்துப் பேசிய ஜே கே ஆர். முருகன், இந்த மாதம் முழுவதும் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம், அதன் ஒரு பகுதியாக நாளை துப்பரவு பணியார்கள் 51 பேருக்கு சேலைகளும், நாளை மறுதினம் 49 வது வார்டில் 151 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், அதற்கு மறுநாள் ஸ்ரீவைகுண்டத்தில் நலத்திட்ட உதவிகள் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து முதல்வராக தளபதி விஜய் வருவார் எனவும் அவர் தெரிவித்தார்.





