மோடி, அமித்ஷா ஆலோசனையில் அடிப்படையில் மேற்கு வங்கத்தில் 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டதா என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்காளம் :
மேற்கு வங்காளத்தில் கடந்த முறை 7 கட்டமாக நடந்த தேர்தல் இந்த ஆண்டு 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். மார்ச் 27 ம் தேதி தொடங்கும் முதல் கட்ட தேர்தலானது ஒரு மாதம் நடைபெற்று ஏப்ரல் 29 ம் தேதி முடிவடைகிறது.
இந்தநிலையில், 294 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காளத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறுவதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் போது மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 8 கட்டம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
Read more – இன்றைய ராசிபலன் 27.02.2021!!!
மேலும், மோடியும் அமித்ஷாவும் எவ்வளவு யுக்திகள் மேற்கொண்டு பாஜகவை காலூன்ற வைக்க நினைத்தாலும் இங்கு வெற்றி பெறப்போவது என்னவோ நாங்கள் தான் என்றார். மேலும், நான் வங்கத்தின் மகள் என்றும் பாஜகவை விட இந்த மண்ணில் வாழும் மக்களை நன்கு அறிந்தவள் என்றும் தெரிவித்துள்ளார்.