இன்று எம்.எல்.ஏ-வாக பதவியேற்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
பவானிபூர் தொகுதியின் திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரிவால் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.
இந்நிலையில், செப்.30-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகளை மட்டுமே பெற்றார். குறைந்த வாக்குகளை பெற்றாலும் நான் தான் மேன் ஆஃப் த மேட்ச் என மார்தட்டிக் கொண்டார் பிரியங்கா.
இதனால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து, இன்று அக்டோபர் 7 -ம் தேதி மேற்கு வங்க சட்டசபையில் மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் அவர்கள், பவானிபூர், ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கான மூன்று எம்எல்ஏ -க்கள், முதல்வர் மம்தா பானர்ஜி, அமிருல் இஸ்லாம் மற்றும் ஜாகிர் ஹொசைன் ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதனால் மம்தா மேற்கு வங்க முதலமைச்சராக தொடர்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கின.