தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என பொதுமக்களுக்கு ஐயம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக என்றாலே தேர்தல்களில் தில்லுமுல்லு செய்யும் கட்சி என்று பேசினார்.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி நகைக்கடன் ரத்து விவகாரத்தில் தமிழகத்தில் குழப்பம் நீடிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.