இந்த நிற மாற்றம் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம் ஆனால் அதன் ஆபத்து மிக அதிகம். அமெரிக்காவில் உள்ள நெவாடாவின் மாகாணத்தின் பாலைவனங்களில் உள்ள ஒரு ஏரி லேக் பிரமிட். அது தற்போது நீலம் கலந்த பச்சை நிறத்தில் மாறியுள்ளது. அருகில் இருக்கும் பகுதி வாசிகள் யாரும் அங்கு போகக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென அங்கு அதிகமாக வளர்ந்த பாசியால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 22ம் தேதி முதல் முறையாக நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டன. அப்போது அதில் மனிதர்களுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் சயனோடாக்சின் எனும் விஷம் கலந்துள்ளது தெரியவந்துள்ளது.
The Joint Polar Satellite System (JPSS) செயற்கைக்கோள் கடந்த வெள்ளிக்கிழமை பிரமிட் ஏரியின் செயற்கைக்கோள் படத்தை பகிர்ந்தது. நீரில் ஏராளமான கால்சியம் கார்பனேட் கலந்து இருப்பதால் இந்த நிறம் ஏற்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இது நீர்வாழ் உயிரினங்களுக்கும் இந்த மாற்றம் புதிது தான் என்றாலும் அவைகளுக்கு ஆபத்தில்லை என்கின்றனர். கொரோனா பரவல் ஆரம்பம் ஆனதில் இருந்தே இந்த ஏரி பொதுமக்கள் பார்வைக்கு மூடப்பட்டிருந்தாகவும் அதனால் தான் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.