மற்ற செயற்கைக் கோள்களை அழிக்கும் ஆயுதம் தாங்கிய செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது ரஷ்யா. அமெரிக்க இராணுவம் இதற்கு கடும் எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
ரஷ்ய தயாரிப்பான Cosmos 2543 எனும் செயற்கைக்கோள் தன் சுற்றுப்பாதையில் இருக்கும் மற்ற செயற்கைக்கோள்களை சுட்டு அழிக்கும் திறன் வாய்ந்தது என கூறப்பட்டது. இதை சமீபத்தில் சோதித்தது ரஷ்யா. விண்வெளியில் இராணுவ மயமாக்களை தவிர்ப்பது குறித்து சர்வதேச பேச்சுக்கள் நடந்து வரும் நிலையில் ரஷ்யாவின் இச்செயல் அமெரிக்காவை கவலை அடையவைத்துள்ளது.
ஒரு துணை செயற்கைக் கோளை cosmos 2543ன் பாதையில் நிலைநிறுத்தி மணிக்கு 250கிமீ வேகத்தில் செலுத்தப்பட்டது. பின்னர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட்து. இதில் எந்த செயற்கைக்கோளும் தாக்கப்படவில்லை. சோதனை முயற்சியாகவே இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுப்பது போல ரஷ்யா செயல்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விண்வெளியையும் இராணுவ மயமாக்குவதற்கு ரஷ்யா முயற்சித்து வருவதற்கு இதுவே சான்று. ரஷ்யாவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, எப்படி பதிலளிக்க போகிறது?. கருத்துக்கள் வாயிலாகவா? அல்லது இதே போன்றதொரு செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.