வேற்றுக் கிரகவாசிகளை நாம் தேடுவதற்கு உந்துதலாக இருப்பதும், அறியத் தூண்டுவதுமாய் இருப்பதும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் பிரதான கட்டமைப்புகளும், எழுத்துக் குறிப்புகளுமே. தற்போதுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு கூட அவற்றைக் கட்ட முடியுமா என நாம் சந்தேகித்துக் கொண்டிருக்கக் கூடிய வேளையில் அக்கட்டிடங்கள் எவ்வாறு கட்டப்பட்டன எனும் கேள்வியே நம்மை வேற்றுக்கிரக வாசிகளை நோக்கி இட்டுச்செல்கின்றன.
தற்கால தொழில்நுட்பத்திற்கே சவால் விடும் வகையில் கட்டிடக்கலையில் தனிச்சிறப்புடனும் மிகவும் திருத்தமாகவும் அமைந்திருக்கிறது எகிப்தின் பிரமீடுகள். அவ்வளவு பெரிய கட்டமைப்பின் கன அளவு, அவற்றின் மிகச்சரியான சதுர சுற்றளவு போன்றவற்றை அந்த கால தொழில்நுட்பத்தைக் கொண்டு எப்படி மிகத்தெளிவாக கணக்கிட்டார்கள் என்பது இதுவரை நமக்கு தெரியவில்லை.
கீழ்நோக்கி சரிவு பெற்றிருக்கும் இந்த பிரமீடுகளின் சாய்வு அளவை கணக்கெடுத்தால் கணிதத்தின் முக்கியமான அலகான Phi க்கு இணையாக இருக்கிறது. ஆனால் இந்த அலகு கிரேக்கர்களால் பிரமீடு கட்டிமுடிக்கப்பட்டு பலநூறு ஆண்டுகளுக்கு பின்பே கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அது இறந்த அரசர்களின் சமாதியாக நாம் கருதும் வேளையில் அது அணு அல்லது மின் உற்பத்தி மையமாக செயல்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அக்கால மனிதர்கள் இவ்வளவு சரியாக கட்டியிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வேறு எதாவது முன்னேறிய நாகரிகத்தைச் சேர்ந்தவர்களின் உதவி கிடைத்திருக்க வாய்ப்புண்டு.
இது போன்ற இன்னும் ஆச்சரிய படக்கூடிய தகவல்களை தொடர்ந்து அடுத்த பகுதிகளில் பார்க்கலாம். பகுதி 1 மற்றும் பகுதி இரண்டைப் பார்க்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்:
https://seithialai.com/science/are-we-alone-in-the-universe/
https://seithialai.com/science/are-we-alone-in-the-universe-2/