ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். சிலந்தி வலை எப்படி கட்டப்படுகிறது என்பதையும் அவை செயல்படும் முறையையும் பல ஆண்டுகளாக ஆராய்ந்து அவற்றை போல மனிதர்களால் செய்ய முடியுமா என யோசித்தனர்.
சிலந்தி தன் வலையை நூலில் உருவாக்குகிகிறது. அவை மற்ற நூல்களை போல் அல்லாமல் அசாதாரணமான சுருங்கி விரியும் தன்மையை கொண்டிருக்கிறது. இறை அந்த வலையில் விழும் பொழுது அவற்றை தப்பிக்க முடியாதபடி அவற்றின் எடைக்கு ஏற்ப விரிந்து இறுக்கமாக பற்றிகொள்கிறது. இதற்கு காரணம் அவற்றின் மேல் உள்ள ஒருவகையான திரவம்.
இதை போன்றே செயற்கையான வலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் PLASTIC நூலிழையில் ஒருவகையான எண்ணெய் போன்ற திரவத்தை பூசினார்கள். அப்போது அந்த நூலானது சுருங்கி விரியும் போது கீழே தொங்காமல் அந்த திரவ துளிகளுக்குள்ளே வளைந்து பெருந்திக்கொண்டது. அவை தொடர்ந்து இழுக்கப்பட்ட போது பழைய நிலைக்கு வந்தது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட இம்மாதிரியான மெல்லிய ஆனால் மிகவும் வலிமையான சுருங்கி விரியும் தன்மை கொண்ட நூல் தற்போதுள்ள தொழில்நுட்ப யுகத்தில் பெரும்பங்காற்றப் போவது உறுதி. சிலந்திகளுக்கு அவை வலையாக தெரிந்தாலும் மனிதன் அவற்றின் மேன்மையை உணர்ந்தவன். அவற்றை கட்டுமானதுறையிலும், பொறியியல் துறையிலும், பல சிக்கல் வாய்ந்த கட்டமைப்புகளிலும் மேலும் எண்ணிலடங்கா செயல்களிலும் அவற்றை பயன்படுத்தலாம்.