ஒரே ஒரு கொள்கை. அதன் மூலம் குவாண்டம் இயற்பியல் தான் இனி அறிவியலின் எதிர்காலம் என அனைவரையும் நினைக்க வைத்தார் Wolfgang Earns Pauli.
குவாண்டம் இயற்பியலின் ஒப்பற்ற கொள்கையாக கருதப்படும் Pauli’s Exclusion Principle அல்லது பாலியின் தவிர்ப்புக் கொள்கையை வகுத்தவரான இவர் 1900ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி வியன்னாவில் பிறந்தார். 1918ல் பள்ளிப்படிப்பை முடித்த இவர் Munich ல் உள்ள Ludwig Maxmilian பல்கலைக்கழகத்தில் Arnold Sommerfield எனும் புகழ்பெற்ற விஞ்ஞானியின் கீழ் பயின்று முனைவர் பட்டம் வென்றார்.
Sommerfield இவரை பொதுச்சார்பியல் கோட்பாடு குறித்து ஆய்வுகளை செய்யுமாறு அறிவுறுத்தியதன் பேரில் University of Gottingenக்கு சென்று, அறிஞர் Max Bornன் உதவியாளராக பணிபுரிந்து கொண்டே தன் ஆய்வுகளைச் செய்தார். பின்னர் 1923ல் University of Hamburgல் பேராசிரியராக பணிபுரியத் தொடங்கிய பாலி அங்கேயே பாலியின் தவிர்ப்புக் கொள்கையை இயற்றினார்.
தவிர்ப்புக் கொள்கை எனப்படுவது ஒரு அணுவில் உள்ள எந்த இரு எலக்ட்ரான்களும் ஒரே மாதிரியான குவாண்டம் எண்களை பெற்றிருக்க முடியாது என்பதுதான். குவாண்டம் இயற்பியலின் தவிர்க்க முடியாத கொள்கையாக இது மாறிவிட்டது. 1923ல் இவர் இயற்றிய இக்கொள்கைக்காக 1945ல் Einstienஆல் பரிந்துரைக்கப்பட்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
பாலி ஒரு இயற்பியலாலராக செய்த பங்களிப்பை விட குவாண்டம் இயற்பியலுக்கு என தனிப்பட்ட முறையில் இவர் ஆற்றிய பங்கு அளப்பறியது. இவரது நண்பர்கள் Niels Bohr, Werner Heisenberg போன்றோருடன் இணைந்து பல ஆய்வுகளை நடத்தினார்.
நியூட்ரினோ பற்றி ஆய்வுகள் நிகழ்த்திய போது இவருக்கு கிடைத்த பல எதிர்மறை விமர்சனங்களாலும், இவர் மனைவியுடன் இவர் பெற்ற விவாகரத்தாலும் சிறிது காலம் மனமுடைந்து காணப்பட்டார். பின்னர் beta decay எனப்படும் ஒரு வகை கதிரியக்க பொருட்களின் காலச்சிதைவு ஏற்படுகின்றது என்பதையும், இவ்வண்டத்தின் மிகச்சிறிய பொருளாக “புரோட்டான்கள்” கருத்தப்பட்டு வந்த வேளையில், அதை விட நிறையும் அடர்த்தியும் குறைந்த பொருள் இருப்பதை 1930ல் கூறினார். பின்னர் அதுவே 1956ல் Fredrick Reines, Clyde Cowan என்பவர்களால் நியூட்ரினோ என செயல்முறை மூலம் நிருபித்தனர்.
1940ல், இயற்பியலின் புரட்சியாக Boson மற்றும் Fermionகள் என்பவை இருப்பதாக கண்டறிந்தார். இந்த கடவுள் துகள் எனப்படும் Bosonகளை கண்டுபிடிக்கவே 23கிமீ நீளம் கொண்ட Large Hadron Colloider போன்ற பல ஆயிரம் மதிப்புள்ள பிரம்மாண்டமான நுண்ணோக்கிகள் கட்டப்பட்டது வரலாறு.
இயற்பியல் துறையின் மிகவும் ஒழுக்கமான நேர்மையான மனிதர் என பெயர் பெற்ற இவர், தன் பல்வேறு ஆய்வு கருத்துக்களை நேரிடையாக மக்களுடன் பகிர்ந்துகொள்ளாமல், தன் நண்பர்களுடன் கடிதத் தொடர்புகளிலேயே வெளிப்படுத்தினார். இதன் மூலம் இவரது பல்வேறு கருத்துக்களுக்கு மற்றவர்கள் பெயர் வாங்கிக்கொண்டாலும் அதை நினைத்து இவர் பெரிதாக ஒன்றும் வருந்தவில்லை. லண்டன் ராயல் சொஸைட்டி, ராயல் சொஸைட்டி of Switzerland போன்றவற்றில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1940ல் இரண்டாம் உலகப் போரின் போது வியன்னாவில் இருந்து வெளியேறி Switzerlandல் குடியேற முயன்றார். பின்னர் அமெரிக்கவில் குடியுரிமை பெற்று வாழத்தொடங்கினார். Max Planck, Lorentz Award போன்ற பல விருதுகளைப் பெற்ற இவர் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1958ல் Zurich நகரில் காலமானார்.
குவாண்டம் இயற்பியலை பற்றி மேலும் அறிந்து கொள்ள :