ஓட்டல்களில் அமர்ந்து உணவு அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு, இரு மடங்கு அதிகம் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.
உலக அளவில் 9 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை கொன்று குவித்துள்ளா, கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில், நோய்த்தொற்று பரவும் அபாயம், பரவும் வழிமுறைகள், தடுக்கும் முறைகள் என பல காரணங்கள் அறியப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் 11 கொரோனா தனிமை மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 14 நாட்களுக்குள் ஓட்டல்களில் உணவருந்தியவர்கள், மற்றவர்களை விட இரண்டு மடங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் வணிக வளாகங்கள், பொது நிகழ்ச்சிகள், அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து அல்லது மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோருக்கு மாஸ்க் அணிவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால், தொற்று சாதாரண நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மாஸ்க் அணிந்து கொண்டு சாப்பிடவோ, பருகவோ முடியாது என்பதால் தொற்று பரவும் அபாயம் இரண்டு மடங்காக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.