வண்டு போன்ற இந்த கடல் வாழ் உயிரினம் இந்தோனேஷியா அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஏழுகால் உயிரினம் இது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு isopod வகையைச் சேர்ந்த உயிரினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகையான ஏழு கால் உயிரினங்கள் சில மில்லிமீட்டர்களில் இருந்து 20 இன்ச் வரை இருக்கும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட உயிரினத்திற்கு Bathynomus raksasa என பெயரிடப்பட்டுள்ளது. raksaka என்றால் இந்தோனேசிய மொழியில் ராட்சதன் என்று அர்த்தம். கடந்த பல ஆண்டுகளில் 13இன்ச் அளவுள்ள ஏழு கால் உயிரினம் கண்டுபிடிப்பது இது தான் முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு ஜாவா கடலில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பொது இதை கண்டுபிடித்ததாகவும் கிட்டத்தட்ட 4000அடி ஆழத்தில் இந்த உயிரினத்தை கண்டுபிடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரினம் பார்ப்பதற்கு ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் வரும் டார்த் வேடர் கதாபாத்திரம் போலவே உள்ளதால் இது கடல் உலகின் டார்த் வேடர் என்றழைக்கபப்டுகிறது. தற்போது நிகழ்ந்திருக்கும் இந்த கண்டுபிடிப்பின் மூலம் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து நாம் எந்தளவுக்கு தெரிந்து கொண்டுள்ளோம் எனத் தெரிகிறது. இன்னும் அறியப்படாத உயிரினங்கள் எவ்வளவோ இருப்பது இதன் மூலம் தெரிய வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.