கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் இந்த வைரஸ் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது எனும் கூற்று பலராலும் முன்வைக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் உள்ளிட்ட பலரும் இதை ஆதரித்த நிலையில் தொடர்ந்து பலரும் இக்கருத்தை மறுத்தே வந்தனர். கொரோனா வைரஸ் மிருகங்களில் இருந்து தான் மனிதனுக்கு வந்தது என வாதிட்டனர். தற்போது ஆய்வாளர்கள்
கொரோனாவை ஆய்வகங்களில் உருவாக்க முடியாது என்பதற்கு சில புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.
உறுதியாக அவை எப்படி இயற்கையாகத் தான் உருவானது என்பதை ஆய்வாளர்கள் அவற்றின் மரபணு மூலக்கூறுகளை ஆராய்ந்ததன் மூலம் கண்டறிந்துள்ளனர். Sars-Cov2 வகையை சேர்ந்த இந்த வைரஸின் மரபணு தகவல்களை ஆய்வாளர்கள் உலகம் முழுவதும் வெளியிட்டுள்ளார்கள். ஒருவேளை அதை மனிதர்கள் யாராவது கையாண்டிருந்தால் அதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்ற கொரோனா வைரஸ் வகைகளில் இருந்து கோவிட்19 எப்படி மாறுபடுகிறது என்றால் அவற்றின் மரபணு மூலக்கூறுகளில் உள்ள ACE 2 எனும் புரதம் மனித தோலின் மேற்புறத்தில் உள்ள புரத்ததுடன் மிகவும் எளிதில் பிணைந்துகொள்ளும். இது படிப்படியாக நிகழ்ந்த மாற்றம் தான் எனவும் இதற்கு முந்தைய கொரோனா வைரஸ் வகைகளில் இருந்து இவை படிப்படியான பரிணாம வள்ச்சியின் மூலமாகவே மாறி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் வௌவால்களிடம் காணப்படும் மற்றுமோர் வைரஸ் வகையான RATG13 உடைய தன்மையும் இவற்றுக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே இவை வௌவால்களிடம் இருந்தே பரவயிருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. 100சதவிகிதம் இவை இயற்கையாக உருவாக்கப்பட்டதா செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர்.