பரிணாம வளர்ச்சி பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் உயிரினங்கள் தோன்ற வழிவகுத்தது – மேலும் பல உயிரினங்கள் மனிதர்களால் அரிதாகவே காணப்படுகின்றன. “WTF, Evolution?! A Theory of Unintelligible Design”என்ற புத்தகத்தில், எழுத்தாளர் மாரா க்ரூன்பாம் 100 க்கும் மேற்பட்ட விசித்திரமான, மிகவும் அசாதாரணமான உயிரினங்களைத் தேர்ந்தெடுத்து பரிணாமம் அவர்களை எவ்வாறு உருமாற்றியுள்ளது என எழுதியுள்ளார். அதில் தேர்ந்தெடுத்த சில படங்கள் உங்களுக்காக.
பலூன் மீன்
Helicocranchia pfefferi எனும் இந்த ஸ்க்விட் (Squid ) பரிணாமவளர்ச்சி காரணமாக இப்படி வித்தியசமான தோற்றத்தில் உள்ளது.
பன்றி மூக்கு தவளை
Nasikabatrachus sahyadrensis எனும் அறிவியல் பெயர் கொண்ட பன்றி மூக்கு தவளை, 13கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியின் பலனாக கிடைத்தது.
ஜாம்பி மீன்
இந்த மீனை பற்றி நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை. நீங்களே பார்க்கலாம்.இதன் அறிவியல் பெயர் Uranoscopus sulphureus.
புழுவா? ரோபோவா?
உலகின் மிகக் கடினமான கால நிலைகளிலும் வாழும் ஒரு திறன் வாய்ந்த உயிரினம் தான் Tardigrade. இது ஒரு உயிரினம் தான் என்றாலும் பார்ப்பதற்கு ஒரு ரோபோ போலவே இருக்கிறது.
சப்பை மூக்கு வௌவால்
Hipposideros vittatus எனும் அறிவியல் பெயர் கொண்ட இந்த வௌவாலுக்கு மூக்கு விபத்தினால் உடைந்த மாதிரியே இருக்கும்.
மீசைக்க்கார நண்பா
Sus barbatus அறிவியல் எனும் பெயர் கொண்ட இந்த பன்றிக்கு மீசை கொஞ்சம் அதிகம் வளர்ந்துவிட்டது.
என்ன இது?
Tapirus terrestris எனும் இந்த உயிரினத்திற்கு மூக்கு தான் கொஞ்சம் சரியில்லை.