காணாமல் போன செல்போன்களையே கண்டுபிடிக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் பல கோடி மதிப்புள்ள விமானங்கள் தொலைந்து போனால் கண்டுபிடிப்பது எப்படி? வானிலை ஆய்வு, எதிரிகளின் விமானங்களை கண்டுபிடிப்பது போன்றவை எப்படி சாத்தியமாகிறது?
ரேடார்
நாம் தற்போது உபயோகிப்பது மிகவும் பழமையான ஆனால் அதே சமயம் திறன் வாய்ந்த தொழில்நுட்பமான RADAR தொழில்நுட்பம். RADAR என்றால் Radio Detection And Ranging என்பதன் சுருக்கம்.ரேடியோ அலைகளை பயன்படுத்தி இவை செயல்படுகின்றன. RADAR ஐ பயன்படுத்தி ஒருபொருள் எந்த திசையில் உள்ளது, எவ்வளவு தொலைவில் உள்ளது, பயணம் செய்து கொண்டிருந்தால் அதன் வேகம் என்ன என்பதையும் அறியமுடியும்.
ரேடாரின் வரலாறு
1886ல் ஜெர்மானிய விஞ்ஞானி Heinrich Hertz ஆல் கண்டுபிடிக்கப்பட்ட ரேடியோ அலைகளை கண்டுபிடித்த பிறகு பல்வேறு விஞ்ஞானிகள் அதன் பயனை பல்வேறு வகையில் மேம்படுத்தினர். இரண்டாம் உலகப்போரின் போது பல்வேறு நாடுகளால் பயன்படுத்தப்பட்டாலும் போரின் இறுதியில் அனைவரும் பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பட்டது.
எப்படி செயல்படுகிறது :
ரேடியோ அலைகள் ஒருபொருளை நோக்கி பாய்ச்சப்படும் பொழுது அவை அப்பொருளின் மீது பட்டு பிரதிபளிக்கும். இந்த செயல்பாட்டினை அடிப்படையாக வைத்தே RADARகள் இயங்குகின்றன.
Transmitter எனப்படும் கருவியின் மூலம் Radio அலைகள் உருவாக்கப்பட்டு பின் Antenna வின் மூலம் வெளியிடப்படுகிறது. அவை மீண்டும் பிரதிபளித்து வரும்பொழுது Reciever மூலம் அந்த தகவல்கள் பெறப்பட்டு அவற்றின் திசை,வேகம் மற்றும் தொலைவு கணக்கிடப்படும். அவை பயனம் செய்யும் வேகம் Doppler Effect எனும் புகழ்பெற்ற விளைவின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது.
எதை எல்லாம் அறியலாம்
ரேடியோ அலைகள் கிட்டதட்ட ஒளியின் வேகத்தில் அதாவது 3லட்சம் கி.மீ வேகத்தில் செல்வதால் அவை மிக விரைவாக ஓரிடத்தில் பட்டு திரும்பவரும். இதன்முலம் ஒரு பொருளை மிக வேகமாக கண்டறிய இயலும். RADARகளை பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் பயன்படுத்தலாம். மழை,வெயில், கடும் பனிமூட்டத்திலும், பனியை ஊடுருவியும் எளிதாக ஏவலாம். மிகவும் தொலைதுர தேடலுக்கும் இவை பயன்படுத்தப்படுகிறது. RADARகளை பயன்படுத்தி விமானங்களோ அல்லது கப்பல்கலோ தொலைந்தால் கண்டுபிடிக்கப்படுவதோடு எதிரில் வரும் விமானமோ கப்பலோ வரும் திசை மற்றும் வேகத்தை வைத்து மோதல்களை தவிர்க்கலாம். அதோடு மழை மேகங்கள் ஒரு நாட்டின் மேல் எவ்வளவு தொலைவில் உள்ளது, எப்போது மழைபெய்யும் போன்ற தகவல்களும் RADAR மூலம்பெற முடியும்
காணாமல் போகும் விமானங்களை ஏன் கண்டுபிடிக்க முடிவதில்லை?
கானாமல் போன இந்திய விமானப்படையின் AN-32 ரகவிமானம் , மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் போன்றவை காணாமல் போனதோடு அதற்கான காரணமும் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு காராணம் விமானங்கள் உயர் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டாலும் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் வகுக்கப்பட்டது 1950களில். சரியான வழிமுறைகள் பிரம்மாண்டமான கடலில் விழும் விமானங்கள் உள்ளே மூழ்கிவிடுவதால், அவற்றை கண்டறியமுடிவதில்லை. அவற்றின் கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்படுவதில்லை.