மவுத்வாஷ் ஜெல் மூலம் வாயை தினசரி சுத்தம் செய்தாலே, கொரோனா வைரசை செயலிழக்கச் செய்யலாம் என புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது.
உலகம் முழுவதும் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு, சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு என கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலகநாடுகள் பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தடுப்பூசியை கண்டறிவதில் தீவிரம் காற்றுவதோடு, வைரஸ் தொடர்பான பலதரப்பட்ட ஆய்வுகளையம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சில வாய்வழி கிருமி நாசினிகள் மற்றும் மவுத்வாஷ்கள் மனித கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டிருள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மருத்துவ வைராலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதவது:-
பல வாய்வழி மற்றும் நாசோபார்னீஜியல் வாய்க் கொப்பளிப்பான்களை ஆய்வக அமைப்பில் சோதித்ததில், அவை மனித கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோதனை செய்யப்பட்ட தயாரிப்புகளில் குழந்தை ஷாம்பு, பெராக்சைடு புண்-வாய் சுத்தப்படுத்திகள் மற்றும் மவுத்வாஷ்கள் ஆகியவை அடங்கும்.
தொற்றுநோய்க்குப் பிறகு வாயில் உருவாகும் வைரஸின் அளவைக் குறைக்க இந்த தயாரிப்புகள் சில பயனுள்ளதாக இருக்கும். கொரோனாவை ஏற்படுத்தும் சார்ஸ், கோவ்-2 இன் பரவலைக் குறைக்க உதவக்கூடும்.
நாசி மற்றும் வாய்வழி சுத்திகரிப்பான்களில் பல மனித கொரோனா வைரஸை நடுநிலையாக்குவதற்கான வலுவான திறனைக் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது கொரோனா தொற்றுக்கு ஆளான நபர்களால் பரவும் வைரஸின் அளவைக் குறைக்கும் ஆற்றலை இந்த தயாரிப்புகள் கொண்டிருக்கக்கூடும் என்று கூறுகிறது.
அமெரிக்காவின் பென் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர் கிரேக் மேயர்ஸ் கூறும் போது, தற்போதைய சூழலில், வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் தேவை. நாங்கள் சோதித்த தயாரிப்புகள் சந்தையில் இயல்பாக கிடைக்கின்றன. பெரும்பாலும் அவை நாம் தினசரி நடைமுறைகளில் பயன்படுத்தும் ஒரு சாதனமே என தெரிவித்துள்ளார்.