
நாசாவின் வாயேஜர் 1979 ஆம் ஆண்டில் முதன்முதலில் வியாழன் கோளின் ஜோவியன் மின்னல்களைப் பார்த்தது. அந்த கிரகத்தின் மின்னல், பூமியைப் போன்றது என்று கருதப்பட்டது. இது இடியுடன் கூடிய மழையில் மட்டுமே நிகழ்கிறது என்றும் கருதப்பட்டது. வியாழனில் இது மேகங்களுக்குக் கீழே புயல்களை 28 முதல் 40 மைல் அளவில் உருவானாதாக கருதப்பட்டது. தற்போது ஜூனோவின் ஆய்வு முடிவுகள் மின்னல்களைப் பற்றி வேறு கதைகளை சொல்கின்றன.

நாசாவின் ஜூனோ விண்கலத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, வியாழன் கிரகத்தின் வளிமண்டலத்தில் அம்மோனியாவின் அளவு எதிர்பாராத அளவுக்கு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஒழுங்கின்மைக்கான சில சான்றுகள் பூமியில் உள்ள தொலை நோக்கிகளிலிருந்து முதலிலேயே காணப்பட்டுவிட்டது. எனினும் ஜூனோ விண்கலத்தின் microwave எனப்படும் நுண்ணலை அளவீடுகள், வியாழனின் வானத்தில் அம்மோனியாவின் குறைவு ஏன் நடந்தது என்பது உள்ளிட்ட பல தகவ்களை அறிய உதவியுள்ளது.

பூமியில் பொழியும் மழை போல் அல்லாமல் முற்றிலும் வேறு விதமாக பொழிவது தெரிய வந்துள்ளது. நீர் மேகங்களுக்கு மேலே 16 மைல் உயரத்தில், வியாழனின் சக்திவாய்ந்த இடி இருக்கும் என கண்டுபிடித்துள்ளனர். அங்கு பனியானது அம்மோனியா நீராவியை எதிர்கொண்டு, புதிய அம்மோனியா நீராக உருவாக்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு வியாழனை பற்றிய புரிதலை மேலும் அதிகமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




