இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரீஷியஸ் சுற்றுச்சூழல் பேரழிவின் விளிம்பில் உள்ளது. ஜூலை மாத இறுதியில் ஒரு சரக்கு கப்பல் பவளப் பாறையைத் தாக்கியது. இது எரிபொருள், எண்ணெய், டீசல் ஆகியவற்றை உள்ளடக்கிய கப்பலாகும். தற்போது நடந்திருக்கும் இந்த எண்ணெய் கசிவு விண்வெளியில் இருந்து தெரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. கசிவு இன்னும் அதிகமாகும் போது இது இன்னும் பெரிய பாதிப்பாக மாறும் என அஞ்சப்படுகிறது.
ஜப்பானுக்கு சொந்தமான M.V.Wakashio என்ற கப்பல் ஜூலை 25 அன்று மொரிஷியஸின் தென்கிழக்கு கடற்கரையில், ஒரு பவளப்பாறையைத் தாக்கியது. அதன் பின்னர், அதன் மேலோட்டத்தில் ஒரு விரிசல் தோன்றியது, அதில் 4,290 டன் குறைந்த கந்தக எரிபொருள் எண்ணெய், 228 டன் டீசல் மற்றும் 99 டன் லப்ரிகேஷன் எண்ணெய் ஆகியவை அடங்கும். இந்த கப்பல் சீனாவிலிருந்து பிரேசிலுக்கு கொண்டு சென்று கொண்டிருந்த கப்பலாகும்.
” இந்த வகையான பேரழிவை நாங்கள் எதிர்கொள்வது இதுவே முதல் முறை ” என அமைச்சா் தெரிவித்துள்ளார். கசிவு உடனடியாக நடக்கவில்லை. மொரிஷியஸ் கடற்கரையிலிருந்து சுமார் 2 மைல் (3.2 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள பவளப்பாறையில் மோதியதில் கப்பல் சிக்கிக்கொண்டது. பின்னர் கப்பல் குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அப்போதிருந்து, கப்பலை உறுதிப்படுத்தவும், எண்ணெயை பாதுகாப்பாக வெளியேற்றவும் நடந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
கப்பலின் மேற்புறத்தில் ஏற்பட்ட ஒரு விரிசலில் இருந்து மொரிஷியஸின் அழகான நீலக் கடலில் எண்ணெய் கலக்க ஆரம்பித்தது. சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றும் நாட்டின் மீன்பிடித் தொழிலுக்கு ஆதரவளிக்கும் நீர்நிலைகளில் நுழையத் தொடங்கியது எண்ணெய். Maxar Technologies எனும் நிறுவனத்தின் செயற்கைக்கோள்களால் எண்ணெய் கசிவின் படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.