நம் அண்டத்தின் மிகத் தெளிவான 3d வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். 40 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்மீன் கூட்டங்கள், மிகவும் பிரகாசமான, ஆற்றல் நிறைந்த குவாசர்களின்(Quasar) பகுப்பாய்வின் விளைவாக இந்த மெய்சிலிர்க்க வைக்கும் 3d வரைபடம் நமக்கு கிடைத்துள்ளது. உலகெங்கிலும் சுமார் 30 ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் இணைந்து BigBangக்கு பிறகான “பிரபஞ்ச விரிவாக்கத்தின் முழுமையான கதையை” நமக்கு அளித்துள்ளனர்.

இருபது வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக ஆராய்ச்சியாளர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அண்டத்தின் மிகத் துல்லியமான வரைபடத்தையும் அண்ட விரிவாக்கத்தின் அளவிடுகளையும் கணித்துள்ளனர். Sloan Digital Sky Survey (SDSS)யின் கணக்கெடுப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

BigBang பெரு வெடிப்பை தொடர்ந்து அண்டம் எவ்வாறு விரிவடைந்தது , விண்மீன் திரள்கள், மற்றும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக அண்டம் எப்படி விரிவடைந்தது வருகிறது, தொடர்ந்து எப்படி விரிவடையும், சிக்கலான பல புதிர்கள் போன்றவற்றுக்கு இந்த வரைபடத்தின் மூலம் பதில் கிடைத்துள்ளது. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு, ஹப்பில் கோட்பாடு (Hubble’s Theory) போன்றவற்றை அடிப்படையாகக். கொண்டே இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.