
நாசா தனது Perseverance ரோவரை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், தொழில்நுட்ப கோளாறுகளை தாண்டி வெற்றி பெற்றது. 2021ம் ஆண்டு பிப்ரவரி 18, 2021 அன்று செவ்வாய் கிரகத்தை சென்று சேரும் என எதிர்பார்க்கப் படுகிறது.


புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விமானப்படை நிலையத்திலிருந்து அட்லஸ் வி ராக்கெட் Mars 2020 Perseverence ரோவரை ஏற்றிக்கொண்டு இந்திய நேரப்படி மாலை 5:20க்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவப்பட்ட சிறிது நேரத்தில் தொந்தரவுகள் ஏற்பட்டன. தகவல்தொடர்பு மற்றும் வெப்பநிலை குறைபாடுகள் இருந்த போதிலும் சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது.

Preseverance ரோவர் என்பது நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியதிலேயே மிகவும் அதிநவீன ரோவர் ஆகும். பல சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும் சமாளிப்பதற்கும் தயாரிக்கப்பட்டது. இது செவ்வாய் கிரகத்தில் பண்டைய நுண்ணுயிர் வாழ்க்கையின் அறிகுறிகளைத் தேடும். கிரகத்தின் புவியியல் மற்றும் காலநிலையை வகைப்படுத்தும். தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட பாறை மற்றும் வண்டல் ஆகியவற்றை சேகரிக்கும். அதனை பூமிக்கு அனுப்புவதற்கான வழிவகைகளை ஆராயும்.

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் கட்டமைக்கப்பட்ட Perseverance ரோவர் பல நவீன தொழில்நுட்பங்களை கொண்டதாகும். பல புதிய கருவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தரையிறக்கம் செய்வதற்கு என மேம்பட்ட பல வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பிற புதிய அமைப்புகளுக்கான மேம்பட்ட கணக்கீட்டு திறன்கள் உள்ளன. செவ்வாய் கிரகத்திற்காக நாசா உருவாக்கிய மிகப்பெரிய ரோவர் Perseverance தான்.


Jezero Crater எனப்படும் 48 கிலோமீட்டர் அகலம் கொண்ட பள்ளத்தாக்கில் தான் Perseverance ரோவர் தரையிறங்கவுள்ளது. Jezero பள்ளத்தாக்கில் நுண்ணுயிரிகள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் அனுப்பப்பட்ட ரோவர்களிடம் இருந்த தவறுகளில் இருந்து மேம்படுத்தி இதை தயாரித்துள்ளனர். சீனாவின் தியான்வென் ரோவரைவிட பல மடங்கு சிறப்பு வாய்ந்ததாக Perseverance பார்க்கப்படுகிறது.
சீனாவின் டியன்வென் 1 பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்