சுற்றுச்சூழலை பாதுகாக்க ‘சூரியஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டி’யை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு ஸ்வீடனில் செயல்படும் அமைப்புகள் மூலம் விருது மற்றும் ரூ.8.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுப்புற சூழலை பாதுக்காக்கும் பொறுப்பை மாணவர்களுக்குள் வளர்க்க ஸ்வீடன் நாடு மாணவர் பருவ நிலை விருது வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. சுற்றுச்சூழல், பருவ நிலை மற்றும் எதிர்கால தலைமுறைக்காக தனது பங்களிப்பை வெளிப்படுத்தும் 12 முதல் 17 வயதுள்ள பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க விருது வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில், சுற்றமான காற்று விருது பிரிவினால் இம்முறை சூரியஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த திருவண்ணாமலை எஸ்கேபி வனிதா சர்வதேச பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி வினிஷா பெற்றுள்ளார். இதுபற்றி பரிசு பெட்ரா மாணவி கூறுகையில், துணிகளை இஸ்திரி போட கறிகள் தேவை அதற்காக மரங்கள் வெட்டப்படுகிறது. அந்த மரங்களை வெட்டாமல் பாதுகாப்பதன் மூலம் ஒஸ்ய்ஜ்ன் மற்றும் மழை பெறலாம்.
மேலும் தான் கண்டுபிடித்த வண்டியின் மேற்புறத்தில் சூரிய ஒளித் தகடுகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனை சார்ஜ் செய்ய ஐந்து மணி நேர்மை ஆகலாம், பின்னர் அதனை ஆறு மணி நேரம் உபயோக படுத்தலாம். இதன் விலை 30000 வரையில் ஆகும். இதன் மூலம் 7 ஆண்டுகள் பயன்பெறலாம் என இவர் தெரிவித்தார்.