Mola Alexandrini குடும்பத்தைச் சேர்ந்த SunFish எனப்படும் மோலா மீன்கள் உலகின் மிகப்பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும்.தற்போது இந்த வகை மீன் குஞ்சுகளை விஞ்ஞானிகள் முதன்முறையாக அடையாளம் கண்டுள்ளனர். வியக்கத்தக்க வகையில் விரல் நுனியிலேயே பல மீன் குஞ்சுகளை வைத்துக் கொள்ளும் அளவு மிகவும் சிறிதாக இந்த மீன் குஞ்சுகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய மீன்களின் லார்வாக்கள் (Larva) இவ்வளவு சிறிதாக இருப்பது விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சராசரி வயதுடைய மோலா வகை மீன் 10 அடி நீளமும் 2,000 கிலோகிராம் எடையும் கொண்டவை. அவை மிகவும் வித்தியாசமான வடிவம் கொண்டவை. பிரம்மாண்டமான, தட்டையான உடல் வடிவத்தை கொண்டுள்ளன. இது ஒரு சுறா போன்ற மற்றும் ஒரு பெரிய துடுப்பு போன்ற முதுகெலும்புடன் உலா வரும். அவற்றின் உடல் வழக்கத்திற்கு மாறாக குறுகியும் வால் துடுப்பு இல்லாமல் காணப்படும். அதற்கு பதிலாக, Clavus என்று அழைக்கப்படும் ஒரு நீண்ட அமைப்பைக் கொண்டுள்ளது. நீந்துவதற்கு இவை உதவும்.
ஆனால் லார்வாக்களின் கதையோ வேறு. அவை லார்வாக்களாக இருக்கும் போது ஒரு சில மில்லிமீட்டர் நீளமே உள்ளன. அவற்றின் உடல் சற்று கூட, பெரியவை போல இல்லை. இதனாலேயே இவ்வளவு நாளும் மோலா மீன்களின் லார்வாக்களை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 0.2 அங்குலங்கள் (5 மிமீ) நீளமுள்ள சிறிய மோலா லார்வாக்களை சேகரித்தனர். மரபணு ஆராய்ச்சிக்காக லார்வாவின் புருவங்களில் ஒன்றை அகற்றினர். அதன் மூலம், விஞ்ஞானிகள் டி. என். ஏ பரிசோதனை செய்து அது மோலா மீன் குஞ்சு தான் என கண்டறிந்தனர். கிட்டத்தட்ட லார்வாவில் இருந்து 600மடங்கு அவை பெரிதாக வளர்கின்றது.
இந்த கடல் வாழ் உயிரினங்களை நாம் பாதுகாக்க விரும்பினால், அவற்றின் முழு வாழ்க்கை வரலாற்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் லார்வாக்கள் எப்படி இருக்கின்றன, அவை எங்கு பெருகுகின்றன என்பதை அறிந்து கொள்வதும் இதில் அடங்கும்.