கடந்த வார உலகம் முழுவதும் நிகழ்ந்த அறிவியல் சார்ந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையான புகைப்பட ஆல்பம் உங்கள் பார்வைக்கு.
55லட்சம் ஆண்டுகள் பழமையான கொலைகார ஆந்தை

தற்போது இருக்கும் ஆந்தை மாதிரி இல்லாமல் மிகவும் ஆபத்தான கால்களுடன் உள்ளது இந்த 55லட்சம் ஆண்டுகள் பழமையான ஆந்தையின் புதைப்படிமம்.
நட்சத்திரங்களை பார்க்க சிறந்த இடம்

அண்டார்டிகா வில் இருக்கும் Dome A எனும் பகுதி தான் நட்ச்சத்திரங்களை பூமியில் இருந்து பார்க்க சிறந்த இடம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பச்சையாக மாறிய சிகப்புக் கோள்

செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் எடுத்தது அனுப்பிய புகைப்படம். இதில் புறஊதா கதிர்வீச்சு காரணமாக பச்சை வண்ணத்தில் ஒளிரும் செவ்வாய் கோளை காணலாம்.
கண்டுபிடிக்கப்பட்ட பழமை வாய்ந்த கோவில்

வடக்கு அயர்லாந்து பகுதியில் சமீபத்தில் மிகவும் பழமையான, பதிவு செய்யப்பட்ட வரலாறுக்கும் முற்பட்ட காலமான இரும்பு காலத்தில் கட்டப்பட்ட கோவில் அகழ்வாராய்ச்சி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
எறும்பிடம் மாட்டிய கரப்பான்

சுமார் 1கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இளம் கரப்பான் பூச்சி, கிரெட்டேசியஸ் எறும்பின் (Cretaceous hell ant) தாடைகளால் துண்டிக்கப்பட்டது. அப்போது கொடூரமான எறும்புகளில் ஒன்றாக இருந்த இதனிடம் மாட்டிக்கொண்ட அந்த கரப்பான் பாவம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.




