Tuesday, December 16, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

இன்றைய விஞ்ஞானி : ஆலன் ஜே. பார்ட் (Allen J. Bard)

October 13, 2020
Allen J. Bard

Allen J. Bard நவீன யுக Electro chemistry எனப்படும் மின்வேதியியல் துறையின் தந்தையாகக் கருதப்படுகிறார். Fossil Fuels எனப்படும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக, இவர் தற்போது சூரிய ஒளியில் இருந்து உறுதியான நீடித்துழைக்ககூடிய ஆற்றலைப் பெருவதில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். டெக்ஸாஸில் உள்ள இவரது ஆய்வகத்தில் தொடர்ந்து பல்வேறு வேதிப் பொருட்களை ஆராய்ச்சி செய்து, செடிகளில் நடக்கும் Photosynthesis எனப்படும் ஒளிச்சேர்க்கை முறையை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Bard தனது 60 ஆண்டுகால வேதியியல் துறையில், சுமார் 75 மாணவர்களின் PhD பட்டத்திற்கான ஆய்வில் வழிகாட்டியாக இருந்துள்ளார். Electro chemistry துறையில் இவர் ஆற்றிய பங்கு மிக அதிகம். Electron Spin Resonance எனப்படும் எலக்ட்ரான்களின் சுழற்சியின் மூலம் ஏற்படும் ஒலியதிர்வுகளை கண்டுபிடித்தது, Electrochemistry துறையில் ஒற்றைத் துகள் மோதல் போன்ற பல ஆய்வுகளை மேற்கொண்டார்.

நீட் கலந்தாய்வை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவி…

யுனானி மருத்துவத்தின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை…

இன்றைய விஞ்ஞானி : Christian Andreas Doppler (கிறிஸ்டியன் ஆண்ட்ரியாஸ் டாப்ளர்)

The Journal of Electrocheistry எனும் ஆய்வு இதழில், இதுவரை 125 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். Electrochemical Methods எனும் இவர் இயற்றிய புத்தகம், உலகம் முழுவது ஆயிரக்கணக்கான மாணவர்களால் Electrochemistry துறையின் மிக முக்கிய பாடநூலாக பின்பற்றப்படுகிறது. Electrochemistry துறையின் முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றியுள்ளார் Bard.

Allen J. Bard New york

Electrochemistry துறையில் ஒரு பிரிவாக இருப்பது, chemi Luminescence. Chemi Luminescence எனப்படுவது, வேதிப் பொருட்களை பயன்படுத்தி ஒளிர்வை ஏற்படுத்துவதாகும். Jellyfish எனப்படும் மீன் வகைகளில், இம்மாதிரியான ஒளிர்வை நாம் பார்க்க முடியும். தடயவியல் துறையில் கை ரேகைகளை கண்டுபிடிக்கவும், இரத்தம் எங்காவது இருக்கிறதா என்பதையும் கண்டறியலாம். இரத்த ஓட்டத்தில் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து எவ்வாறு பயனிக்கிறது என்பதைக் கண்டறியவும், ஒரு குறிப்பிட்ட திசுவை மட்டும் கண்கானிக்கவும் இந்த ஒளிர்தல் முறை பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி ஒருவருக்கு Hiv வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் முறையை Bard அறிமுகப்படுத்தினார். Scanning Electrochemical Microscopy எனப்படும் மின்வேதிப் பொருட்களின் செயல்பாடு குறித்து அறியும் நுன்னோக்கிக்கான வடிவம், இவரால் தான் உருவாக்கப்பட்டது.

1933-ஆம் ஆண்டு December 18-ஆம் தேதி Newyork நகரில் பிறந்தார் Allen J. Bard. City College of Newyork-ல் வேதியியல் துறையில் பட்டம் பெற்ற Bard, Harvard பல்கலைக்கழகத்தில் 1958-ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.

Allen J. Bard and Barack Obama

தற்போது University of Texas-ல் பேராசிரியராகவும், Electrochemistry துறையின் இயக்குனராகவும் உள்ளார். American Academy of Arts and Sciences, National Academy of Science போன்றவற்றில் உறுப்பினராக உள்ளார். இவர் ஆற்றிய பணிகளுக்காக 2013-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான ஒபாமாவிடம் இருந்து விருது பெற்றார். Priestly Medal, Wolf Prize in Chemistry, Enrico fermi award, linus pauling award போன்ற விருதுகளையும் வென்றுள்ளார் Bard.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மேல ரபேல்..கீழ பீஷ்மா.. சீனா, பாகிஸ்தானுடன் சண்டைக்கு தயார்..இந்தியா அதிரடி

Next Post

இருந்தாலும் நம்ம ஊரு காரங்களுக்கு இவ்வளவு பாசம் ஆகாது ப்பா…மாப்பிள்ளைக்கு தோனி மேல அவ்வளவு பாசம்… அது பாசம் இல்ல மாமா.. வெறி..

Next Post

இருந்தாலும் நம்ம ஊரு காரங்களுக்கு இவ்வளவு பாசம் ஆகாது ப்பா…மாப்பிள்ளைக்கு தோனி மேல அவ்வளவு பாசம்… அது பாசம் இல்ல மாமா.. வெறி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

November 20, 2025

மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version