5 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணியானது 100-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. சர்வதேச கால்பந்து சங்கமாம பிபாவானது அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இதில் 36 ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்த அர்ஜென்டினா அணி நம்பர் 1 இடத்திலும் பிரான்ஸ் 2-வது இடத்திலும் பதவி வகிக்கிறது தொடர்ந்து பிரேசில் 3 வது இடத்திலும் , இங்கிலாந்து 4-வது இடத்திலும், பெல்ஜியம் 5-வது இடத்திலும் உள்ளது . சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 100-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற லெபனான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலமாக இந்த தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.