ஒரு நாள் போட்டிகளில் 1,000 ரன்களை கடந்து இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் சாதனை படைத்துள்ளார்.
நேற்று, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி 308 ரன்களை எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயஸ் 54 08(57)ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அவர், ஒருநாள் போட்டியில் 1,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
இதற்கு முன் 1,000 ரன்களை 24 இன்னிங்ஸில் விராட்கோலி, ஷிகர் தவான் கடந்து சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக நவஜோத் சிங் சித்து மற்றும் ஸ்ரேயஸ் 25 இன்னிங்ஸில் 1,000 ரன்களை கடந்துள்ளனர்.
குறிப்பாக, ஸ்ரேயஸ் சராசரி 57.14 (வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஆட்டத்தில்) 400 ரன்களை எடுத்துள்ளார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 31 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்ரேயாஸ் இன்னிங்ஸ்: 71(68), 65(41), 70(88), 53(32), 7(7), 80(111), 54(57). சுனில் கவாஸ்கர் (395), வினோத் காம்ளி (397).
இரண்டாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.