இந்திய- ஆஸ்திரேலிய அணிகள் மோதிக்கொண்ட 2 வது ஒருநாள் போட்டியில் ஒரு ருசிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியது தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது.நேற்று முன்தினம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இன்று நடந்த 2 வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது.அடுத்து களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் தோல்வியை தழுவியது.இந்திய அணி ஆரம்பத்தில் 3 விக்கெட் இழந்து தடுமாறி கொண்டு இருந்த போது கேப்டன் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் இந்திய அணியை வெற்றி பெற செய்ய களத்தில் போராடிக்கொண்டு இருந்தனர்.
அப்பொழுது தீடிரென அனைத்து வகையான கேமராவும் பார்வையாளர் அரங்கில் அமர்ந்து இருந்த ஒரு குறிப்பிட்ட ஒரு இந்தியரை நோக்கி திரும்பியது.அவருடன் ஆஸ்திரேலிய பெண் ஒருவரும் உடன் இருந்தார். அந்த இந்திய இளைஞர் எழுந்து நின்று அந்த பெண்ணிற்கு முன் முட்டி போட்டு மோதிரத்துடன் தன் காதலை வெளிப்படுத்தினார்.இதை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பின்பு உற்சாகம் அடைந்து தனது காதலையும் ஒப்புக்கொண்டார் .
அதன் பிறகு அந்த இந்திய இளைஞரை கட்டிப்பிடித்தும்,முத்தமிட்டும் காதலை அழகாக வெளிப்படுத்தினார்.இதைப்பார்த்து ஒட்டுமொத்த பார்வையார்களுடன்,இரு நாட்டு வீரர்களும் அந்த ஜோடிகளை உற்சாக படுத்தினர்.அதிலும் குறிப்பாக மேக்ஸ்வல் உற்சாகத்தில் கைதட்டி அந்த காதல் ஜோடிக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதை பார்த்து அந்த ஜோடி வெக்கத்தில் நெளிந்தது .தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.