தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஏபி டி வில்லியர்ஸ். அவர் தென்ஆப்பிரிக்கா அணியில் அறிமுகமான சமயத்தில் பேட்ஸ்மேன் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங் பணியை செய்து வந்தார். அதன் பிறகு பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துவதற்காக விக்கெட் கீப்பிங் பணியை தவிர்த்தார்.
தற்போது ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸ் ஆர்சிபி அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆர்சிபி அணி இந்த முறை எப்படியாவது நாம் சாதித்து ஆக வேண்டும்.என்ற நிலையில் அணி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதனால், ஆரம்பத்தில்இருந்தே சிறந்த அணியை களம் இறக்க ஆர்சிபி விரும்புகிறது. தற்போது டிவில்லியர்ஸை விக்கெட் கீப்பராக பணியில் அமர்த்த அந்த அணி அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது.
இதுகுறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச் அளித்துள்ள தகவலில் ‘‘தரமான அணியை உருவாக்க ஏராளமான ஆலோசனைகள் நாங்கள் நடத்தி வருகிறோம். இதில் டிவில்லியர்ஸ் ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா அணிக்காக விக்கெட் கீப்பராக செயல்பட்டதை நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம். ஆகவே, அவரின் விக்கெட் கீப்பிங் பணி குறித்து விவாதிக்கப்படும் என்பதை என்னால் தற்போது உறுதியாக சொல்ல முடியும்.
ஆனாலும், சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப சரியான ஏற்ற இறக்கம் கொண்ட அணியை கொண்டே நாங்கள்விளையாடுவோம். எங்கள் அணியின் மிகப்பெரிய பலமாக டிவிலியர்ஸ் விளங்குகிறார். பல ஆண்டுகளாக சிறந்த ஆட்டத்தை எங்களுக்கு தந்துள்ளார்’’ என்றார்.
ஏபி டி வில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும் சிலமுறை விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளார்.