இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
அடிலெய்டு:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது.அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களில் சுருண்டது.
இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் டிம் பெயின் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அதன்பிறகு நேற்று 2 வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் பிரித்திவி சாவின் விக்கெட்டை பறிகொடுத்து அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து இந்திய அணி 36 ரன்களில் சுருண்டது.
ஆஸ்திரேலியா அணியில் சிறப்பாக பந்துவீசி ஹசில்வுட் 5 விக்கெட்டுகளையும்,கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
Read more – சபரிமலையில் நாளை முதல் 5000 பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி : திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு
90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2 வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றி பெற்றது.5 டெஸ்ட்கள் கொண்ட இந்த தொடரில் தற்போது 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.