கிறிஸ் கெயில் மற்றும் மந்தீப் சிங்கின் அதிரடி அரை சதத்தால் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷார்ஜா:
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 57 ரன்களும்,கேப்டன் மோர்கன் 40 ரன்களும் எடுத்து இருந்தனர்.
150 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் 28 ரன்களில் வெளியேற,பொறுப்புடன் விளையாடிய மந்தீப் சிங் அரைசதத்தை கடந்தார்.மறுமுனையில் அடித்து ஆடிய 27 பந்துகளில் அரைசதம் அடித்து அவுட் ஆனார்.தொடர்ந்து சிறப்பாக விளையாடி மந்தீப் சிங் 19 ஓவர்களில் பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியில் மந்தீப் சிங் 66 ரங்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த கிறிஸ் கெயிலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
பஞ்சாப்,கொல்கத்தா அணிகள் தலா ஆறு வெற்றிகளுடன் சம நிலையில் உள்ள நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு யார் தகுதி பெறுவார் என்று இரு அணிகளுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது.