இந்திய கிரிக்கெட் அணியின் பெளலர்களில் தரமான பல சாதனைகளை செய்து கொண்டு வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
சுழற்பந்து வீச்சில் இந்திய அணிக்கு என்று உலக அளவில் தனியாக பட்டியல் உண்டு கடந்த 12 ஆண்டுகளில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் வரிசையில் இந்திய ஸ்பின்னர் களுக்கெல்லாம்தலைமையாக இருப்பவர் அஸ்வின் ரவிச்சந்திரன்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இப்போதைய செய்தி அவரைப் பற்றியதல்லதற்பொழுது அவரை ஐபிஎல்2020 கிரிக்கெட் விளையாடுவதற்காக யுஏஇ செல்ல உள்ளதால் அவருடைய மகள்கள் அவருக்கு மழலை மொழியில் பிரியா விடை கொடுத்து அனுப்பியுள்ளனர் அதுமட்டுமின்றி இந்த கொரொனா காலத்தில் பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகளை குறித்து அவரது செல்ல மகள்கள் அவருக்கு கொடுத்த உபதேசம் தற்போது வைரலாகி வருகிறது.
அவரது மனைவி ப்ரீத்தி இதை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் அதில் அஸ்வினின் இரு மகள்களும் அவருக்கு செல்லமாக என்ன செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பது குறித்து ஆலோசனை வழங்குகிறார்கள் .
இதை டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவனின் மனைவி ப்ரீத்தி இனிமேல் இரு மகள்களுக்கும் ஆன்லைன் வகுப்பிற்கு கூட இருந்து நான் தான் கவனிக்க வேண்டும் இதற்கு ஏதாவது டிப்ஸ் இருந்தால் சொல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார் .