ஹைதராபாத் அணியின் அட்டகாசமான பந்துவீச்சால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

13 வது ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடந்து கொண்டு இருக்க,நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து ஹைதராபாத் அணியில் பேரிஸ்டவ் அரைசதம் அடித்து 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எடுத்தது.163 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி தொடக்க வீரர்களாக தவான்,பிரித்திவி சா வர,புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் பிரித்திவி சா 2 ரன்களுடன் அவுட் ஆகி நடையை கட்டினார்.தவான் மறுமுனையில் அவ்வப்போது பௌண்டரிகளை ஓட விட்டு கொண்டு இருந்தார்.கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கலீல் அஹமத் 5 வது ஓவரில் பௌண்டரி அடித்து ரன் வேட்டையை தொடங்கினார்.அடுத்து நடராஜன் ஓவரில் ஐயர் ஒரு பௌண்டரி ஓட விட,6 ஓவர் முடிவில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து இருந்தது
.ரஷித் கான் வீசிய 7.2 வது ஓவரில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்(17 ரன்கள்,21 பந்துகள்) சமத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.தொடர்ந்து தவான் ரஷித் பந்தில் பௌண்டரி அடிக்க,டெல்லி அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 54 ரன்கள் பெற்று இருந்தது.தவான் ரஷீத் பந்தில்( 34 ரன்கள்,31பந்துகள்) கீப்பர் பேரிஸ்டவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.13 வது ஓவர் வீசிய அபிசேக் சர்மா பந்தில் தொடர்ந்து பண்ட் 2 சிக்ஸர் அடித்து அசத்தினார்.14 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்து இருந்தது.கலீல் வீசிய 15 வது ஓவரில் ஹெட்மயர் 2 சிக்ஸர்கள் அடித்து பறக்க விட டெல்லி அணி 100 ரன்கள் கடந்தது. 16.1 வது பந்தை வீசிய புவனேஸ்வர் குமார் ஹெட்மயரை வெளியேற்ற,மறுமுனையில் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார் ரிஷப் பண்ட்.அடுத்து களம் இறங்கிய ஸ்டோய்னிஸ் முதல் பந்தே பௌண்டரி அடித்து அசத்த,பண்டும் அவர் பங்கிற்கு ஒரு பௌண்டரியை ஓட விட்டார்.அடுத்து பண்ட் ரஷித் பந்தில் 28 ரன்களுடன் நடையை கட்ட,டெல்லி அணி 17 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 119 ரன்கள் எடுத்து இருந்தது.

17.5 வது பந்து நடராஜன் அட்டகாசமாய் யார்க்கர் போட்டு ஸ்டோய்னிஸை வெளியேற,டெல்லி அணிக்கு 12 பந்துகளில் 37 ரன்கள் தேவையாக இருந்தது. 19 வது ஓவர் புவனேஷ்வர் குமார் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 20வது ஓவர் 3 வது பந்தில் அக்சார் பட்டேலை கலீல் கிளீன் போல்ட் ஆகி வெளியேற,அடுத்த பந்து முறையே டாட்,3 ரன்கள் டெல்லி அணி எடுத்தனர். கடைசி பந்தில் 22 ரன்கள் தேவையாக இருக்க ரபடா ஒரு சிக்ஸர் அடித்தார்.20 ஓவர் முடிவில் டெல்லி அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து ஹைதராபாத் அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த ரஷித் கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.




