தீபக் ஹூடாவின் அதிரடி அரை சதத்தால் சென்னை அணிக்கு 154 ரன்கள் பஞ்சாப் அணி இலக்காக வழங்கியது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் ,கேப்டன் கே.எல்.ராகுல் களம் இறங்கினர்.ஆரம்பம் முதல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 5 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 40 ரன்களை கடந்தது.தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அகர்வால்(26 ரன்கள்,15 பந்துகள்) லுங்கி நிகிடி வீசிய 6 வது ஓவரில் கிளீன் போல்ட் ஆகி வெளியேற,கேப்டன் கே.எல்.ராகுலும் 26 ரன்களில் அவுட் ஆகி நடையை கட்டினார்.
தொடர்ந்து கிறிஸ் கெயில் மற்றும் பூரன் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆக,13 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களுடன் தடுமாறியது.அதன் பிறகு மந்தீப் மற்றும் ஹூடா நிலைத்து நின்று அடிக்க 15.4 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களை கடக்க.இம்ரான் தாஹிர் வீசிய அதே ஓவரில் ஹூடா அசத்தலாக ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார்.மந்தீப் சிங்(14 ரன்கள்,15பந்துவுகள்) 17 வது ஓவர் வீசிய ஜடேஜா பந்தில் கிளீன் போல்ட் ஆக,அடுத்த ஓவர் வீசிய லுங்கி நிகிடி பந்தில் ஜிம்மி நீசம் ருது ராஜ்ஜிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் வெளியேறினார்.அதே ஓவரில் தீபக் ஹூடா அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை நொறுக்கினார்.தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 26 பந்துகளில் அரை சதம் கடக்க,19 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 139 ரன்கள் எடுத்து இருந்தது.கடைசி ஓவரில் ஹூடா ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரி விரட்ட,20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்து சென்னை அணிக்கு 154 ரன்கள் இலக்காக வழங்கியது.
பஞ்சாப் அணியில் தீபக் ஹூடா 62 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
சென்னை அணியில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 3 விக்கெட்களை கைப்பற்றினார்.