பெங்களூர் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பெங்களூர் அணியை பேட் செய்ய அழைத்தது.அதனை தொடர்ந்து பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக பட்டிகல்,பிலிப் களம் இறங்கினர்.பிலிப் ஆரம்பத்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க,பொறுப்புடன் விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் பட்டிகல் அரைசதம் கடந்தார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 29 ரன்களில் வெளியேற,டி வில்லியர்ஸும் பெரிதாக ஜொலிக்கவில்லை.கடைசி நேரத்தில் சிவம் துபே ஓரளவு போராட்ட,20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் பெற்று டெல்லி அணிக்கு 153 ரன்கள் இலக்காக வழங்கியது.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக பட்டிகல் 41 பந்துகளில் 50 ரன்களை எடுத்து இருந்தார்.
டெல்லி அணியில் அதிகபட்சமாக நோர்கியா 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
153 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிரித்திவி சா,தவான் உள்ளே வந்தனர்.ஆரம்பத்தில் பிரித்திவி சா 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேற,தவான் உடன் இணைந்த ரஹானே பொறுப்புடன் ஆடி இருவரும் அடுத்தடுத்து அரை சதத்தை கடந்து அசத்தினர்.13 வது ஓவர் வீசிய சர்பாஸ் தவானை அவுட் செய்ய அடுத்தடுத்து டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்,ரஹானே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.ஸ்டோனிஸ் மற்றும் ரிஷப் பண்ட் ரன் எண்ணிக்கையை விரட்டி அசத்த,19 ஓவர் முடிவில் டெல்லி அணி 153 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ரஹானே 60 ரன்களும்,தவான் 54 ரன்களும் எடுத்து இருந்தனர்.
பெங்களூர் அணியில் சர்பரஸ் அஹமத் 2 விக்கெட்களும்,வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
டெல்லி அணி சார்பில் பெங்களூர் அணிக்கு எதிராக 3 விக்கெட் எடுத்த நோர்கியாக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
மும்பை அணி இதுவரை பிளே ஆப் சுற்று பெற்று இருந்த நிலையில் இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் 2 வது இடத்தையும்,பெங்களூர் அணி 3 வது இடத்தையும் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.4 வது இடம் யாருக்கு என்ற கேள்விக்கு நாளை நடக்கும் மும்பை மற்றும் ஹைதராபாத் போட்டியின் முடிவை பொறுத்தே ஹைதராபாத் அணியா ? கொல்கத்தா அணியா? என்று விடை தெரியும்.