தவான் அதிரடி அரை சதத்தால் ஹைதராபாத் அணிக்கு டெல்லி அணி 190 ரன்கள் இலக்காக வழங்கியது.

அபு தாபி:
ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய தகுதி சுற்று 2 ல் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டோனிஸ் மற்றும் தவான் களம் இறங்கினர்.கட்டாய வெற்றி பெற்றால் தான் இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்தி 8 ஓவர்களில் இருவரும் 80 ரன்களை திரட்டினர்.ரஷித் கான் வீசிய 9 வது ஓவரில் சிறப்பாக விளையாடிய ஸ்டோனிஸ் 38 ரன்களில் போல்ட் ஆக,மறுமுனையில் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய தவான் அரைசதம் கடந்து அசத்தினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்(21 ரன்கள்,20 பந்துகள்) ஹோல்டர் வீசிய 14 வது ஓவரில் மனிஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக ,அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மயர் ரன் வேட்டையில் இறங்கினார்.ஹோல்டர் வீசிய 18 வது ஓவரில் ஹெட்மயர் அடுத்தடுத்த 3 பௌண்டரிகளை விரட்ட,அதே ஓவரில் தன் பங்கிற்கு தவான் ஒரு பௌண்டரியை ஓட விட்டார்.சந்தீப் சர்மா வீசிய 19 வது ஓவரில் தவான்(78 ரன்கள்,50 பந்துகள்) lbw முறையில் அவுட் ஆக,19 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து இருந்தது.கடைசி ஓவர் வீசிய நடராஜன் சிறப்பாக பந்து வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க.டெல்லி அணி 20 ஓவர்களில் 189 ரன்கள் அடித்து ஹைதராபாத் அணிக்கு 190 ரன்கள் இலக்காக வழங்கியது.

டெல்லி அணியில் 22 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஹெட்மயர் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
ஹைதராபாத் அணியில் ஹோல்டர்,சந்தீப் சர்மா மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
டெல்லி அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வீரர்கள் 3 கேட்ச் தவற விட்டும்,அடுத்தடுத்து சில தவறான பீல்ட்டிங்கால் சொதப்பினர்.ஒரு முக்கியமான போட்டியில் ஹைதராபாத் அணி இப்படி சொதப்பியதால் அது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.




