கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகுவதாக அந்த அணி நிர்வாகம் இணையத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
2020 ஐ.பி.எல் தொடர் ஆரம்பம் முதலே அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்துகொண்டே வருகிறது.சென்னை அணியில் கொரோனா தொற்று தாக்கம்,ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் விலகல்,காயம் காரணமாக புவனேஷ்வர் குமார்,அமித் மிஸ்ரா வெளியேறுதல் போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து தற்போது கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகி உள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா அணியில் சிறப்பான வீரர்கள் இருந்தும் தினேஷ் கார்த்திக் தலைமையில் பெரிய அளவில் இந்த தொடரில் ஜொலிக்கவில்லை. இதனால் கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்த்திக் மீது விமர்சனங்கள் எழுந்து அவர் நீக்கப்படுவாரா என்று கேள்விகள் தொடர்ந்து வெளிப்பட்டது.மேலும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தினேஷ் கார்த்திக் மீது கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தது.
இந்த நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகுவதாக அறிவித்துள்ளார். தனது விலகல் குறித்து சில மணி நேரங்களுக்கு முன்புதான் தினேஷ் கார்த்திக் முடிவு எடுத்து, அணி நிர்வாகத்திற்கு கடிதமும் எழுதி உள்ளார்.அதில் அதோடு இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கொல்கத்தா அணி நிர்வாகத்தின் இணையத்தள பக்கத்தில் வெளியாகி உள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு கோப்பை பெற்று தந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. இன்று நடக்கும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மோர்கன் கேப்டனாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.