கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை அறிவித்து, தன் வருங்கால மனைவியான வைஷாலி விஸ்வேஸ்வரனின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
விஜய் சங்கர், கடந்த 2018-ஆம் ஆண்டு, இலங்கைக்கு எதிராக நடந்த டி20 போட்டியில், அறிமுகமானார். ஓராண்டுக்குப் பின்னர், மெல்பர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் விளையாடினார். 2019-ல் தமிழக ரஞ்சி அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதுவரை இந்தியாவுக்காக 12 ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் சங்கர். 2019-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை அணியிலும் சங்கர் இடம் பெற்றிருந்தார். இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.பி.எல் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாட உள்ளார்.
விஜய்-ன் நிச்சயதார்த்த அறிவிப்பைத்தொடர்ந்து, கே.எல். ராகுல், சஹால், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும், கருண் நாயர், அபினவ் முகுந்த், ஜெய்ந்த் யாதவ் உள்ளிட்ட வீரர்களும், தங்களது வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டனர். முன்னாள் கிரிக்கெட் வீரரான பத்ரிநாத்தும், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.