கோவிட்19 தொற்றுநோய்க்கு பின் நடந்த முதல் டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பின்னர், இங்கிலாந்து இப்போது பாகிஸ்தானை மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி 20 ஐ தொடர்களில் சந்திக்கிறது
நாளை ஆகஸ்ட் 5 ஆம் தேதி மான்செஸ்டரில் முதல் டெஸ்ட்தொடங்குகிறது. பார்வையாளர்கள் இல்லாத மூடிய கதவுகளுக்குப் பின்னால் விளையாடும் இந்தத் தொடரில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இங்கே
பாபர் அசாம் மற்றும் அசார் அலியின் பேட்டிங் திறமை
விண்டீஸுக்கு எதிரான இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் சிறந்த ஆட்டத்தை கண்டபாகிஸ்தான் தரப்பு, பாபர் அசாமின் பேட்டிங்கில் அவர்களை எதிர்த்து ஆடும் ஒரு நம்பிக்கையான ஆட்டத்தை எதிர்பார்க்கின்றது 23 வயதான அவர் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளார், 2018 இல் லார்ட்ஸில் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் அசாம் காயம் அடைந்த போதிலும், இரண்டாவது இன்னிங்ஸில் அசாம் பேட்டிங் ஆடாத நிலையிலேயே, பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் அசார் அலி பற்றியும் நிறைய எதிர்பார்க்கப்படும். இவர்இங்கிலாந்துக்கு எதிராக நிறைய கவுண்டி கிரிக்கெட் மற்றும் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 27 இன்னிங்ஸ்களில் 31.96 சராசரியாக 799 ரன்கள் எடுத்துள்ளார். 2012 ல் துபாயில் நடந்த 3 வது டெஸ்டின் போது 157 ரன்கள் எடுத்தது உட்பட சில சாதனையை செயல்படுத்தி உள்ளார்
ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ’அச்சுறுத்தல்
அனைத்து கண்களும் கடைசி தொடரில் 363 ரன்களுடன் அதிக மதிப்பெண் பெற்ற பென் ஸ்டோக்ஸ் மீது, சராசரியாக 90.75 என்பது அதிர்ச்சியூட்டும். இருப்பினும், பாகிஸ்தானுக்கு எதிராக ஈர்க்கக்கூடிய சாதனை படைத்த கேப்டன் ஜோ ரூட் அவர்களிடமிருந்தும் நிறைய எதிர்பார்க்கப்படும்.
பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் 17 இன்னிங்சில், ரூட் 61 க்கு மேல் சராசரியாக 254 ரன்கள் எடுத்துள்ளார். ரோரி பர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிபிலி போன்ற பேட்ஸ்மேன்களும் முறையே 46.80 மற்றும் 45.20 சராசரியைக் கொண்டுள்ளனர்.
டியூக்ஸ் பந்தைக் திறமையாக கையாளும்கலைஞரான அப்பாஸ், 2018 இல் லார்ட்ஸில் இங்கிலாந்தின் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்
.
இங்கிலாந்தின் பேட்டிங் வரிசைக்கு எதிராக அப்ரிடியும் ஆபத்தானவராக இருக்கக்கூடும். அவர் வெறும் 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், ஆனால் பந்துவீச்சில் மிகவும் பயனுள்ள சூழல்கட்டுப்பாட்டைக் கொடுத்தால் அதன்மூலம் இங்கிலாந்திற்குஅழிவை ஏற்படுத்த முடியும்.
ஜேம்ஸ் ஆண்டர்சனின் 600 விக்கெட் மைல்கல்
மூத்த வீரர்கள்ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இவர்களில், இங்கிலாந்து நான்கு பேரைத் தேர்ந்தெடுப்பது எளிதல்ல.
600 டெஸ்ட் விக்கெட்டில் இருந்து 11 விக்கெட்டுகள் தொலைவில் உள்ள ஆண்டர்சன் இருக்கிறார்.
நேருக்கு நேர்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்கள் 26 வது டெஸ்ட் தொடரில் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ள உள்ளன. பாகிஸ்தான் 25 தொடர்களில் 8 ஐ வென்றது, இங்கிலாந்து 9 ஐ வென்றுள்ளது. எட்டு தொடர்கள் டிராவில் முடிந்தது. இங்கிலாந்தில் கடைசி இரண்டு தொடர்களை (2016 இல் 2-2 மற்றும் 2018 இல் 1-1) சமன் செய்ய பாகிஸ்தான் முடிந்தது.
குழுக்கள்:
பாகிஸ்தான்: அசார் அலி (கேப்டன்), பாபர் அசாம் (துணை கேப்டன்), ஆபிட் அலி, ஆசாத் ஷபிக், ஃபவாத் ஆலம், இமாம்-உல்-ஹக், காஷிப் பட்டி, முகமது அப்பாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சர்பராஸ் அகமது, சதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி, ஷான் மசூத், சோஹைல் கான் மற்றும் யாசிர் ஷா.
இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், டொமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராலி, சாம் குர்ரான், ஒல்லி போப், டோம் சிபிலி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட். ரிசர்வ் வீரர்கள்: ஜேம்ஸ் பிரேசி, பென் ஃபோக்ஸ், ஜாக் லீச், டான் லாரன்ஸ்