சனிக்கிழமை நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரின் தொடக்க டெஸ்ட் போட்டியில் பாக்கிஸ்தான் மகத்தான வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது
அவர்களின் பந்து வீச்சாளர்களும் பீல்டர்களும் நடுநடுவேகோரஸில் இங்கிலாந்தை கிண்டல் செய்ய ஆரம்பித்து கொண்டிருந்தார்கள், பெவிலியன் நோக்கி நடக்கும்போது அமைதியாக இருக்குமாறு ஒல்லி போப் சைகையில் தெரிவித்து விட்டு சென்றார் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் விக்கெட்டை நசீம் ஷா வீழ்த்தினார்
தரமான சம்பவம் செய்யக்கூடிய வீரர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஒல்லி போப் வெளியேறிய பிறகு, பாகிஸ்தானுக்கு வெற்றி எளிதாக அமையும் என்ற நிலைமை நிலவியது ஆனால் பாகிஸ்தான் கனவில் மண் விழுந்தது தொடர்ந்து ஆடிய ஜோஸ் பட்லர் (75), கிறிஸ் வோக்ஸ் (84 *) ஆகியோரின் ஆட்டம் பாகிஸ்தானை வெற்றியின் பிடியில் இருந்தவர்களை ஓங்கி மிதித்து கீழே தள்ளியது
கிறிஸ் வோக்ஸ்,கூறுகையில் எனக்கான ஒரு பந்து என்னை நோக்கி கண்டிப்பாக வரும் அதை நான் ரன்னாக மாற்றுவேன் என்று நம்பினேன் என்றார் முன்னதாக ஜோஸ் பட்லர் பலகேட்சுகளை கோட்டை விட்டிருந்தார் மற்றும் ஸ்டம்பிங் வாய்ப்புகளை தவறவிட்டார், எனவே அவரும் தன்னை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார்
பாக்கிஸ்தான் பந்துவீச்சு தாக்குதலைத் தவிர்த்து, வியக்கத்தக்க வகையில் எதிர் தாக்குதல் நடத்திய இருவரும்,பாகிஸ்தானை நிலைகுலைய வைத்தனர்
ஆரம்பத்தில் இரண்டு ஆங்கில பேட்ஸ்மேன்களையும் பாக்கிஸ்தான்அவர்களுக்கே உரித்தான சில தீவிரமான வார்த்தை விளையாட்டுகள் மூலம் மிரட்ட முயன்றனர். ஆனால் அதை இங்கிலாந்து ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அவர்கள் ஆட்டத்தில் மென்மேலும் ஈடுபாடுடன் ஆட ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து 139 ரன்கள் கூட்டணி அமைத்தனர் அது பின்தங்கியிருந்த இங்கிலாந்தை ஒரு மகத்தான மறுபிரவேசம் செய்ய உதவியதுடன், போட்டியையும் 3 விக்கெட்டுகளால் வென்றது.
277 ரன்கள் எடுத்த ரன் சேஸ் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் 10 வது அதிகபட்சமாகவும்,
2008 க்குப் பிறகு முதன்முறையாக ஓல்ட் டிராஃபோர்டு டெஸ்ட் போட்டியில் இந்த இலக்கைத் துரத்துவதில் இங்கிலாந்து வெற்றிகரமாக முடித்திருந்தது.
பாக்கிஸ்தானைப் பொறுத்தவரை, முதல் டெஸ்டில் 80 சதவீதத்திற்கும் மேலாக ஆட்சி செய்த ‘கணிக்க முடியாத’ அணியாக விளங்கியது . ஆனால் நான்காம் நாள் ஆட்டம் அவர்களை தலைகுப்புற கீழே விழ வைத்தது .
இப்போது பாகிஸ்தான் புள்ளிவிவரம் மிகுந்த மோசமான நிலைமையில் உள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வெளியே ஆடிய போட்டிகளில் தொடர்ந்து 7 வது முறையாக தோல்வியடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அவர்கள் 2-0 என்ற கணக்கில் வெள்ளையடித்து அனுப்பியது தென்னாப்பிரிக்காவில் அவர்கள் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர், இப்பேர்ப்பட்ட வேதனையான சாதனையுடன் பாகிஸ்தான் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகி கொண்டிருக்கிறது .