கே.எல் .ராகுல் டெஸ்ட் தொடரில் தேர்வானது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியதை எதிர்த்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீ காந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டது மற்றும் அவரை ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக நியமித்தது போன்ற விஷயங்கள் தொடர்ந்து சர்ச்சையாக வெடித்து வருகிறது.இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இன்னும் கே.எல்.ராகுல் துணை கேப்டன் பதவி வகிக்கும் அளவிற்கு அவர் இன்னும் தகுதி பெற வில்லை.கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கே.எல்.ராகுலின் டெஸ்ட் இன்னிங்ஸ் சொல்லும் அளவிற்கும் பெரியதாக இல்லை.வெறுமனே ஐ.பி.எல் தொடரின் அவரின் பங்களிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு எவ்வாறு டெஸ்ட் அணியில் அனுமதிக்கலாம் என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் வெளியிட்ட இந்த கருத்தால் பலர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவரை விளாசி மஞ்ச்ரேக்கர் கருத்து குறித்து கே.எல்.ராகுலின் டெஸ்ட் அணியில் தேர்வு பெற்று இருப்பது குறித்து கேள்வி கேட்பதா? அவர் டெஸ்ட் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டு உள்ளார். மஞ்ச்ரேக்கர் கருத்தை நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டேன்.மேலும் அவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்வது வெறும் குப்பை கதை. ராகுல் தொடர்ந்து சிறப்பாக ஆடவில்லை என்றாலும் அவர் ஆஸ்திரேலியாவில் தன் அறிமுகப் போட்டியில் சதம் அடித்தும் உள்ளார்.ராகுல் வேகப் பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக ஆடக் கூடியவர்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மும்பையை தாண்டி சிந்திக்க தவறிவிட்டார். அது தான் தற்போது பிரச்சனை. நாம் நடுநிலையாக பேச வேண்டும். மஞ்ச்ரேக்கர் போன்றவர்கள் மும்பையை தாண்டி சிந்திக்க வேண்டும் எனவும், அவர் மும்பை மாநில வீரர்களுக்கு ஆதரவாக மட்டுமே பேசி வருகிறார் என்று ஸ்ரீகாந்த் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்