சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா , மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றி பற்றி நெகிழ்ச்சியான கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

சுரேஷ் ரெய்னா அண்மையில் நட்சத்திர நாயகன் தோனியை தொடர்ந்து தானும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபில் போட்டிகளில் பங்கேற்க துபாய் சென்றுள்ளார் இந்நிலையில் சுரேஷ் ரெய்னா மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றி உருக்கமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது ,
“சகோதரரே நீங்கள் எப்பொழுதும் எங்கள் இதயங்களில் உயிருடன் வாழ்கிறீர்கள் , உங்களின் ரசிகர்கள் எல்லாவற்றையும் விட உங்களையே அதிகம் இழந்ததாக உணர்கிறார்கள் , எனக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உள்ளது இங்குள்ள தலைவர்கள் உங்கள் இறப்பில் சம்பந்தப்பட்ட சிறு கல்லையும் விட மாட்டார்கள் நீங்கள் மிகவும் உத்வேகமளிக்கக்கூடியவர்”.

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஜூன் மாதம் 14 ம் தேதி பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை சிபிஐயிடம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
சுரேஷ் ரெய்னா தனது பதிவில் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தை குறிசொல்லிட்டிருக்கிறார் (Tag).




