காமன்வெல்த் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்குகின்றன.

இங்கிலாந்தில் இன்று தொடங்க உள்ள 22வது காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5,000 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய நேரப்படி இரவு 11:00 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது. இந்தியா சார்பாக பங்கேற்கும் வீரர்களுக்கு தலைமை தாங்கி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசியக்கொடியை ஏந்தி அழைத்துச் செல்கிறார். இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 215 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா தேசியக் கொடியை ஏந்தியவாறு தலைமை தாங்கி செல்வார் என அறிவிக்கப்பட்டது. ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி வென்ற அவர், இறுதிப்போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டதால் ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு ஒரு மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதுகுறித்து நீரஜ் சோப்ரா வருத்தம் தெரிவித்த நிலையில், பி.வி.சிந்து தேசியக்கொடியை ஏந்தி செல்கிறார்.
-பா.ஈ.பரசுராமன்.




