ஸ்விஸ் அணியை 4-0 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா தலைமையிலான இந்திய ஓபன் பி அணி ஒயிட்வாஷ் செய்தது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகின்றன. 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டிகள் ஜூலை 29ம் தேதி தொடங்கிய நிலையில் ஆரம்பம் முதலே இந்திய அணி வலுவாக இருந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இன்று நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் அணி பி பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். சுவிஸ் வீரர் யானிக்குடன் மோதிய அவர் 67வது நகர்த்தலில் யானிக்கை வீழ்த்தினார். இந்த வெற்றி குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில், நான் எனது ரிசல்ட் குறித்து சந்தோஷப்படவில்லை, வெற்றி பெறுவேன் என நினைக்கவில்லை, என்னை பொறுத்தவரை கருப்பு வெள்ளை என்று வித்தியாசம் இல்லை, எதுவாக இருந்தாலும் உறுதியாக விளையாட வேண்டும் என்று கூறினார்.
மேலும், செஸ் ஒலிம்பியாட் 3வது சுற்றில் இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் ரவுனக் சத்வானி வெற்றி பெற்றார். இந்தியாவின் பொதுப்பிரிவு ஏ அணியில் விளையாடிய ஹரி கிருஷ்ணா வெற்றி பெற்றார்.
-பா.ஈ.பரசுராமன்.