இந்தியா, ஜிம்பாவே அணிகள் மோதும் ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடக்கிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாவேக்கு சென்றுள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்டு 18,20 & 22 தேதிகளில் நடக்கிறது. இது 2023ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றாக அமைந்துள்ளது. ஏனெனில் இதிப்ல் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் 10 புள்ளிகள் வழங்கப்படும். இந்த நிலையில் இந்தியா, ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான முதல்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையில் அணி களம் காண்கிறது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல்:
இந்திய அணி: ஷிகர் தவான், சுப்மன் கில், ருத்ராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன், தீபக் ஹூடா, அக்ஷர் படேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது அலேஷ்கான்.
ஜிம்பாவே அணி: தகுட்வனாஷி கைதானோ, டேடிவனாவ்ஹி மருமானி, இன்னசெண்ட் கையா, வெஸ்லி மாதேவிர், சிகந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா (கேப்டன்), ரையான் பர்ல் அல்லது டோனி முனியங்கோ, லூக் ஜாங்வி, பிராட் இவான்ஸ், விக்டர் யாச்சி, தனகா சிவாங்கா.