இந்தியா, ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஹராரேவில் தொடங்கியுள்ளது.
இந்தியா, ஜிம்பாவே அணிகள் மோதிய முதல் கிரிக்கெட் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதற்கிடையே இரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி விவரம்: ஷிகர் தவான், சுப்மன் கில், இஷான் கிஷன், கே.எல்.ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், சர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
ஜிம்பாவே அணி விவரம்: இன்னசெண்ட் கைகா, கைட்டனோ, மாதேவிர், வில்லியம்ஸ்,சிக்கந்தர் ராசா, சகப்வா(கேப்டன்), ரியான் பர்ல், ஜோங்வே, பிராட் எவென்ஸ், விக்டர் நியாசி,தனகா சிவங்கா.




