இந்திய அணியின் அபார பந்துவீச்சால் ஜிம்பாவே அணி திணறி ஆடி வருகிறது.
இந்தியா. ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஹராரேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்து வரும் ஜிம்பாவே அணி 37 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்களை எடுத்துள்ளது.
ஜிம்பாவே அணியில் அதிகபட்சமாக வில்லியம்ஸ் 42 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ரியான் பர்ல் 42 ரன்களை எடுத்து ஆடி வருகிறார். இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.




