இந்தியா, ஜிம்பாவே அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 38.1ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 161 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ரியான் பர்ல் அதிகபட்சமாக 47 ரன்களை எடுத்தார். இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 25.4வது ஓவரில் 167 ரன்களை எடுத்து 5விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இந்திய அணி சார்பில் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 43(39)ரன்களை எடுத்தார். ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் இருவரும் 33 ரன்களை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.




