இந்தியாவில் அடுத்த ஒரு ஆண்டுக்கு நடைபெறும் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களில் முதன்மை ஸ்பான்சராக மாஸ்டர் கார்டு நிறுவனம் தேர்வாகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பேடிஎம் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2023ம் ஆண்டு வரை இருந்த நிலையில், ஸ்பார்ன்சர்ஷிப் உரிமையை மாஸ்டர்கார்ட் நிறுவனத்துக்கு மாற்றித்தருமாறு பேடிஎம் நிறுவனம் விடுத்த கோரிக்கையை ஏற்று பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, 2022-2023ம் ஆண்டிற்கு பிசிசிஐ சார்பாக நடைபெறும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளுக்கும் மாஸ்டர் கார்டு ஸ்பான்சராக இருக்கும்.ஆனால் இது உள்நாட்டு போட்டிகளுக்கு மட்டுமே. பெண்கள் அணி மற்றும் ஆண்கள் தேசிய அணி போட்டி, இராணி டிராபி, துலிப்ராபி, & ரஞ்சிடிராபி ஆகிய போட்டிகளுக்கு மாஸ்டர் கார்டு ஸ்பான்சர் செய்யும்




