டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
துபாய்:
டெல்லி அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் சஹா ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அவுட் ஆகினார்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் அடித்து அசத்தியது.மனிஷ் பாண்டே 44 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக சஹா 87 ரன்களும்,வார்னர் 66 ரன்களும் பெற்று இருந்தனர்.
220 என்ற மாபெரும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக விக்கெட்களை பறிகொடுத்து தடுமாற,ஓரளவு பண்ட் மட்டும் நம்பிக்கை அளித்தபோதிலும் 36 ரன்களில் அவுட் ஆனார்.கடைசி நேரத்தில் துஷார் மட்டும் 9 பந்துகளில் 20 ரன்கள் அடித்து போராட,மறுமுனையில் அனைத்து விக்கெட்களும் 19 ஓவர் முடிவில் சரிந்தது.ஹைதராபாத் அணி டெல்லிக்கு எதிரான போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
45 பந்துகளில் 87 ரன்கள் அடித்து குவித்த விருத்திமான் சஹாவிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.