சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பாப் டு பிளசிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் தென்னாப்பிரிகாவில் 20ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

அந்த வகையில் ஜோகன்ஸ்பர்க்கை மையமாக கொண்டு உருவாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்த அணிக்கு ஜோகன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி என பெயர் வைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.இந்த அணியின் நட்சத்திர வீரராக பாப் டூ பிளிசிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரே கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த அணியை தோனி தயார்படுத்துவார் என்று கூறப்படுகிறது. இதில், இம்ரான் தாஹிர், பிராவோ, டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த அணிக்கு பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் செயல்படுவார் என்று கூறப்படுகிறது. டு பிளசிஸ்க்கு பெரிய விசில் அடிங்க




